காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருப்பினும் பல பகுதிகளில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்தில் 425 பஸ்களில் 370 பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
விருதுநகரில் வழக்கம் போல் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கரூர், தேனி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி சந்தைகள், ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன.
English Summary:Buses Operated as Usual.