campus
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒருசில பொறியியல் கல்லூரிகளை தவிர பல பொறியியல் கல்லூரிகளில் போதுமான மாணவர்கள் சேராததால் மூடப்படும் நிலை உள்ளதாகவும், கலை, அறிவியல் கல்லூரிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே வேலை கிடைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் இடையே பொறியியல் படிப்புகளில் ஆர்வம் குறைந்து வருவதாகவே தெரிகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணிதம், புள்ளியியல், வணிகவியல் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து விலங்கியல், வேதியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால் மாணவர்களின் பார்வை இந்த வகை படிப்புகளின் மீது விழுந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, பெண்கள் கிறிஸ்வத கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பாக பெண்கள் கல்லூரியில் மாணவிகளும், ஆண்கள் கல்லூரியில் மாணவர்களும் சேருவதற்கு நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பத்தை பெற்ற வண்ணம் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

 

 

English Summary: campus interview job for interested in students for arts colleges