நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.
மொத்த காலியிடங்கள்: 800. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 404 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருப்பது அவசியம் அல்லது பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் கணினி குறித்து திறன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வயதுவரம்பு: 1.10.2018 தேதியின்படி நிலவரப்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850 – 1310/7 – 42020 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதி பணிகள் சார்ந்த ஓராண்டு டிப்ளமா பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் தகுதியானவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 708 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.118 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://canarabank.com/media/8121/rp-1-2018-web-advertisement-english-22102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2018