மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தினை அடுத்து, நாடு முழுவதிலும் இருந்து அவ்வழியே செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை வழியாக செல்லக்கூடிய நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதான தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த 17ஆம் தேதியன்று மத்திய பிரதேசம் இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் தண்டவாளங்கள் பெருமளவு சேதமடைந்தன. சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட தமிழக ரயில்கள் குறித்த விவரங்கள் வருமாறு:
1. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7.15 மணிக்கு டெல்லிக்கு புறப்படக்கூடிய கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரயில்
2. ஜூன் 27ஆம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து லக்னோவிற்கு புறப்படும் வாரம் இரு முறை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்.
3. சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூரில் இருந்து பாட்னா வரை செல்லக் கூடிய சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில்
4. ஜூன் 28ஆம் தேதி பெங்களூர் கண்டோன்மெண்ட் – பாட்னா செல்லக்கூடிய பிரிமியம் எக்ஸ்பிரஸ் ரயில்.
மேற்கண்ட நான்கு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் அதற்கேற்றபடி தங்கள் பயண திட்டத்தை மாற்றிக்கொள்ளும்படி தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
English Summary : Canceled four trains passing through Chennai.