தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை நடவடிக்கைகளுக்காக சான்றிதழ்கள் கேட்கப்படும். எனவே, சமீப காலங்களில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் கடையநல்லூர் கோட்டாசியரிடம் சாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவு செய்துள்ளார். ஆனால் உரிய நேரத்தை தாண்டியும் இதற்கான முறையான பதில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து வராத காரணத்தால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முறையான ஆவணங்கள் இல்லை என்று நிராகரித்த அதிகாரிக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.