சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது. இந்த தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.nic.in , www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 14 லட்சத்து 91 ஆயிரத்து 293 மாணவ-மாணவியர் இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. பாட திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாணவ-மாணவியரின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.21 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவியர் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிகமாக உள்ளது.
மேலும் இந்தியாவிலேயே 99.69 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சென்னையை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர் என்பது சென்னை மக்களுக்கு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.87 சதவீதமாகவும், அதற்கு அடுத்தபடியாக கேந்திர வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.85 சதவீதமாகவும் உள்ளது. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.72 சதவீதமாகவும், மாநில அரசுகளின் கண்காணிப்பில் இயங்கும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.61 சதவீதமாகவும் உள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.21 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம், 97.31% என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.1% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
English Summary: CBSE 10th Class Exam Results. Chennai student achievement.