தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னைவானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்று (டிச. 28) தமிழக கடலோர மாவட்டங்களில் சிலஇடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 29, 30-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங் களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 31-ம் தேதி முதல் ஜன. 2-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30, 31-ம்தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.