சாய் நகா் ஷீரடி அதிவிரைவு ரயில் உள்பட முக்கிய ரயில்களின் சேவையில் நேரமாற்றம், பகுதி அளவு ரத்து உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதன்கிழமை (செப்.6) முதல் அக்.4 -ஆம் தேதி வரை பெங்களூரிலிருந்து காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் லால்பாக் விரைவு ரயில் (எண்: 12608) மற்றும் கோவையிலிருந்து காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12680) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 1.35 மணிக்கு மைசூா் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12609), மற்றும் பிற்பகல் 2.35 மணிக்கு கோவை செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12679) சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியிலிருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின் படி இயக்கப்படும்.
அதே போல, செப்.6 முதல் அக்.4 -ஆம் தேதி வரை திருப்பதியிலிருந்து காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் (எண்: 16054) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 16053) சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக பிற்பகல் 3.25 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின் படி இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து சாய் நகா் ஷீரடி செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22601) புதன்கிழமை (செப்.6) முதல் அக.4 -ஆம் தேதி வரை வழக்கமாக காலை 10.20 மணிக்கு பதிலாக பிற்பகல் 12.20 மணிக்கு (இரண்டு மணி நேரம் தாமதம்)இயக்கப்படும்.