முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றி கூறியிருப்பதாவது:
கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் கணினித் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சத்துடன், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். 2015-ஆம் ஆண்டுக்கான விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்குரிய மென்பொருள்கள் 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பம்-விதிமுறைகளை www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை “தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008′ என்ற முகவரிக்கு டிசம்பர் 31-க்கு அனுப்ப வேண்டும். மேலும் இதுகுறித்து தகவல் தெரிந்து கொள்ள 044 – 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.english summary-Cheief minister award dates