schools-leave-271115
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பள்ளிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தீபாவளிக்கு பின்னர் அனைத்து நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 15 தினங்களுக்கு நேற்று 24 பள்ளிகள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று விடுமுறை விடுக்கப்பட்ட 24 பள்ளிகளுக்கு வரும் ஞாயிறு வரை அதாவது நவம்பர் 29வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 24 பள்ளிகள் குறித்த விவரம்:

அரசுப் பள்ளிகள்:

1. அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்.
2. அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி.
3. அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, ஆசிர்வாதபுரம், பிராட்வே.
4. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
5. அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
6. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.

அரசு உதவிபெறும் பள்ளிகள்:

7. ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
8. ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
9. மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி. எழும்பூர்
10. கோட்டி எம்.அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி. ஓட்டேரி.
11. புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.

அரசு – அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்:

12. அரசு தொடக்கப் பள்ளி. சிட்கோ நகர், வில்லிவாக்கம்.
13. அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி, சாலிகிராமம்.
14. திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.
15. அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி. வேளச்சேரி.
16. சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
17. புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி, சின்னமலை.
18. புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு.
19. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு.

மாநகராட்சிப் பள்ளிகள்:

20. சென்னை நடுநிலைப்பள்ளி, அரும்பாக்கம்.
21. சென்னை தொடக்கப்பள்ளி, கோயம்பேடு.
22. சென்னை தொடக்கப்பள்ளி, பஜார் சாலை, சைதாப்பேட்டை.
23. சென்னை நடுநிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்.
24. சென்னை நடுநிலைப்பள்ளி. திடீர் நகர். சைதாப்பேட்டை.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 7 பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English summary-In Chennai 24 schools remain closed until 29th Nov,2015