விக்ரம் நடித்த தூள், மாதவன் நடித்த ‘ரன்’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்ற சென்னை அண்ணா சாலையில் உள்ள பாரம்பரிய கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது.
சென்னை அண்ணா சாலையில் மதராசா ஐ ஆசாம் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடு இல்லாமல் இருந்த பாரம்பரிய கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. 167 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இடிந்ததாக கூறப்படுகிறாது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தன. தகவலின்பேரில் திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜசேகரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களில் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை என்று தீயணைப்பு துரையினர் தெரிவித்தனர்.
இந்த கட்டிடத்தின் இன்னும் சில பகுதிகள் இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதால் இந்த கட்டிடத்தை முழுமையாக இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English summary-Chennai anna salai old building demolished