தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வெளிவந்த அரசு செய்திக்குறிப்பில், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் நாளை மே 1ஆம் தேதி முதல் ஏற்கனவே அமலில் இருக்கும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
நாளை மறுநாள் மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மே 3ஆம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.