தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வர கடந்த 2008ஆம் தமிழக அரசின் அறிவிப்பு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.
இதுகுறித்து குட் ஹோப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை இணைப்புக் கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை உள்பட 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களின் விவரம்:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் தவிர, இதர தனியார் பள்ளிகள், கல்லூரிகளை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளதாக தமிழக அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை கடந்த 2008-ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை தொடர்பாக எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. இது தொடர்பான இறுதி அறிவிப்பாணையை, 6 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லையெனில் முதற்கட்ட அறிவிப்பாணை செல்லாததாகிவிடும்.
ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பாணை 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி அரசிதழில் வெளியானது. இதனால், இந்த அறிவிப்பாணை செல்லாது. எனவே 2010-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், “கல்வி நிறுவனங்களை இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியுமா என்பது குறித்த சட்ட ரீதியான கேள்வி உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு நீடிக்கும்’ என்று உத்தரவிட்டனர்.
English Summary : According to ESI act passed on 2008 private colleges should come under ESI rules and regulations. Now Chennai Highcourt ban ESI Act on colleges.