சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பேராதரவோடு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயங்கி வருகிறது. கட்டணம் அதிகமானாலும், விரைவில் சென்றடைவாதால், பொதுமக்கள் இந்த மெட்ரோ ரயிலை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் சென்னை ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் நேரம் இயங்கும் நேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:
வரும் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணிக்குத் தொடங்கும். இதற்கு முன்னதாக காலை 6 மணியில் இருந்து இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைசி மெட்ரோ ரயில் சேவை முறையே ஆலந்தூர், கோயம்பேட்டில் இருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலும், இரவு பத்து மணிக்கு மேலும் அதிக பயணிகள் வருவதில்லை என்பதால் இந்த முடிவை மெட்ரொ நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு : Metro train Sunday timing
English Summary : Sunday timings was changed for Chennai Metro train.