அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், நடமாடும் பாஸ்போர்ட் சேவை நேற்று துவக்கப்பட்டுள்ளது. வேன் இன்று முதல், சென்னை தாம்பரம் அலுவலகத்தில் இருந்து செயல்படும். படிப்படியாக, பாஸ்போர்ட் பெறுவதற்கான கால வரம்புகள் அதிகமுள்ள, அருகில் உள்ள மாவட்ட பாஸ்போர்ட் மையங்களுக்கும் செல்லும் என தகவல்.
