election_comission21தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அவ்வப்போது அரசு உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இதுவரை பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக அசுதோஷ் சுக்லா அவர்கள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜே.கே. திரிபாதி மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக கூடுதல் டிஜிபியாக சி.சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காவல் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலர் அபூர்வ வர்மா ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary: Chennai Police Commissioner  change, Election Commission directive.