பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வரும் திங்கட்கிழமை (நவம்பர் 5) நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதியன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்கு முந்தைய தினமான நவம்பர் 5-ஆம் தேதியும் விடுமுறை நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள் டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.