தமிழகத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
6,8,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
6 – 12 அரையாண்டு தேர்வு அட்டவணை | ||
தேதி | 6-10ம் வகுப்பு பாடங்கள் | 11,12ம் வகுப்பு பாடங்கள் |
15.12.2022 | —- | மொழிப்பாடம் |
16.12.2022 | விருப்ப மொழிப்பாடம் | ஆங்கிலம் |
19.12.2022 | மொழிப்பாடம் | கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் சத்துணவு, தொழில்பாடங்கள் |
20.12.2022 | ஆங்கிலம் | வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் |
21.12.2022 | கணக்கு | இயற்பியல், பொருளியல் |
22.12.2022 | அறிவியல் | தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், தொழில் பாடங்கள். |
23.12.2022 | சமூக அறிவியல் | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம், அடிப்படை தொழில்நுட்ப பொறியியல், தொழில் பாடங்கள். |