சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சேவை முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சேவைக்கு குறைந்த கட்டணம் ரூ. 10–ம் அதிக பட்சமாக ரூ. 40–ம் நிர்ணயிக்க்கப்பட்டது. இந்த கட்டணம் அதிகம் என்றும் இதனை குறைக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரெயில் பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்ற நகரங்களை விட சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கட்டணத்தை குறைக்கவில்லை.
இந்நிலையில் சின்னமலை – விமான நிலையம் இடையே இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கும் பட்சத்தில் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரையிலான 15 கி.மீ. தூரத்திற்கு புதிய கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்பட உள்ளது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை தற்போது ரூ.40 என்று கட்டணமாக இருந்து வரும் நிலையில் விமான நிலையம் வரை செல்ல கூடுதலாக ரூ. 10 சேர்த்து ரூ. 50 நிர்ணயிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு ரூ. 50 கட்டணம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த கட்டணம் நியாயமானது தான். அதிகம் என்று சொல்ல இயலாது’ என்று கூறினார்.
English Summary: CMBT – airport. Metro train fare, how much do you know ?