சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கலாம் என்ற புதிய முறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் நோட்டாவுக்கு அதிக வாக்கு சதவீதம் கிடைத்தது. இந்நிலையில் இந்த நோட்டா முறையை கல்லூரி தேர்தலிலும் பயன்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்துஅனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து லிங்க்டன் குழு பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த அவ்வப்போது தேவையான அறிவுறுத்தல்களை யுஜிசி வழங்கி வருகிறது.
அந்த வகையில், மாணவர் பேரவைத் தேர்தலின்போது, “நோட்டா’ என்ற பிரிவையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகங்கள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : College should be used for the election ‘NOTA’. UGC instruction