தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ள நிலையில் அவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த குறுகிய கால கணினிப் பயிற்சி ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் இயங்கும் ராமானுஜன் கணினி மையம், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் “சி” புரோகிராமிங் கணினிப் பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் அதே கணினி பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவார காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 15, 22, 29, மே 7, 14 என 5 கட்டங்களாக பயிற்சி நடைபெறும் என்றும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள சேர்க்கை கட்டணம் ரூ.1,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை “Co-ordinator, C Programming” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும் என்றும் சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் இயங்கும் ராமானுஜன் கணினி மையத்துக்கு மாணவர்கள் நேரில் வந்தும் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

English Summary : Anna University’s Summer Holiday Computer Training Classes for one week. The training sessions will take place from 9 am-5pm. The admission fee to attend training classes is Rs 1,000.