தமிழகத்தில் ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவு பிப்ரவரி 12ல் துவக்கப்பட்டது. இதில் பதிவுக்கு பத்திரங்களை ஏற்பதிலும் பதிவு முடிந்த நிலையில் பத்திரங்களை திரும்பித் தரும் நடைமுறைகளிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் பத்திரங்களை வரிசை எண் அடிப்படையில் பதிவுக்கு ஏற்கும் போது வில்லங்க சான்றுக்கான அட்டவணை தயாரித்தல் மற்றும் ஸ்கேன் செய்வதில் அதிகாரிகள் குளறுபடி செய்வது தெரிய வந்து உள்ளது.
இதையடுத்து பதிவுக்கு ஏற்கப்படும் பத்திரங்களை வரிசை முறைப்படி ஸ்கேன் செய்ய வேண்டும்; மாற்றி ஸ்கேன் செய்ய முன்றால் ஏற்காத வகையில் சாப்ட்வேரில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.