சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புற சுற்றுச்சூழல் மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்க அமைச்சர் லிட்டில் ஜான், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.