மனிதர்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கிய பால் என்ற உன்னதமான பொருளை கொடுத்து வரும் பசு, தற்போது தங்கத்தையும் கொடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆம், பசுவின் கோமியத்தில் தங்கம் இருப்பதாகவும் சரியான வேதியியல் பிரித்தெடுத்தலின் மூலம் பசுவின் கோமியத்தில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கலாம் என்றும் குஜராத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் வேளாண் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் 400 கிர் என்ற இனப் பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்தனர். அப்போது 1லிட்டர் கோமியத்தில் 3 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் வரை தங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். இது கடந்த 4 வருடங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அதன் தலைவர் கோலக்கியா கூறுகையில், ‘எருது, ஒட்டகம், ஆடு போன்றவற்றின் கோமியத்தையும் நாங்கள் ஆய்வு செய்தோம். ஆனால், பசுவின் கோமியத்தில் மட்டும் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. சரியான வேதியல் பிரித்தெடுத்தலின் மூலம் அதனை நாம் கண்டுபிடிக்க முடியும்’ என்று கூறினார்.
English Summary: Cow Not only give milk… include gold