ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு உதவும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் மொபைல் ஆப்ஸை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மொபைல் ஆப்ஸை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டனர்.

செக்பிளே சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சிஎஸ்கே ஆப்ஸில், ஐபிஎல் போட்டியியின் நிலவரம், கருத்துக்கள், போட்டி ஆய்வுகள், ரசிகர்கள் பங்கேற்பு, போட்டிகள், சிறிய அளவிலான விளையாட்டுகள், சிஎஸ்கே டிவி, டிக்கெட்டுகள் விற்பனை போன்ற விஷயங்கள் இதில் உள்ளன.

இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் கூறுகையில், ‘ சிஸ்கே ரசிகர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் வகையிலும், அவர்களை எங்களோடு இன்னும் இணக்கமாக வைத்திருக்கவும், இந்த ஆப்ஸை கட்டமைத்து இருக்கிறோம். இந்த ஆப்ஸ் மூலமும், சென்னைசூப்பர்கிங்ஸ்.காம் என்ற தளத்திலும் சென்று அதிகாரபூர்வமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்களையும், அணியையும் டிஜிட்டல் தளத்தில் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியின் முதலாவது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

English Summary: IPL Cricket:CSK Launches Mobile App.