குரூப் 2 தொகுதியின் முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரத்து 635 பேர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய சான்றிதழ்களை மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் மே மாதம் 8ஆம் தேதி வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் விஜயகுமார் நேற்று அறிவித்துள்ளார்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அழைப்புக்கான விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழைப்பு கடிதங்கள் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதங்களை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நாட்
களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒதுக்கப்பட்ட நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
English Summary : Verification of Group certificate for group 2 exams will b e conducted between march 26 to may 8th.