தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 551 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தின் இறுதி வாக்களர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5.82 கோடி என்றும் அதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி என்றும், பெண் வாக்காளர்கள் 2.93 கோடி என்றும், திருநங்கை வாக்காளர்கள் 4,720 பேர் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வயது வாரியான வாக்களர் எண்ணிக்கையின் விபரம் பின்வருமாறு:
18 லிருந்து 19 வயது வாக்களர் எண்ணிக்கை 21 லட்சத்து 5 ஆயிரத்து 344
20 லிருந்து 29 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 76 ஆயிரத்து 288
30 லிருந்து 39 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சம்
40 லிருந்து 49 வயது வாக்களர் எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சம்
50 லிருந்து 59 வயது வாக்களர் எண்ணிக்கை 87 லட்சம்
60 லிருந்து 69 வயது வாக்களர் எண்ணிக்கை 56 லட்சம்
70 லிருந்து 79 வயது வாக்களர் எண்ணிக்கை 26 லட்சம்
80 வயதிற்கு மேலுள்ள வாக்களர் எண்ணிக்கை 7 லட்சத்து 40 ஆயிரம்
மொத்த வாக்களர் எண்ணிக்கை 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர்.
English Summary : Rajesh lakkani gives details of Tamil Nadu voters.