trains-191215-1எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் பாதைகள் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்றும் நாளையும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

ரத்து செய்யப்படும் ரயில்கள்:

1. ரயில் எண் 42009: சென்னை மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி காலை 8.10 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில்.
2. ரயில் எண் 42022: கும்மிடிப்பூண்டி – சென்னை மூர்மார்க்கெட் காலை 11.20 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் இடையே
நிறுத்தப்படும் ரயில்களின் விவரம்:

1. ரயில் எண் 57240: பித்ரகுண்டா – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பாசஞ்ஜர் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
2. ரயில் எண் 57239: சென்னை சென்ட்ரல்- பித்ரகுண்டா இடையே இயக்கப்படும் பாசஞ்ஜர் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
3. ரயில் எண் 42011: சென்னை மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையிலான மின்சார ரில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
4. ரயில் எண் 42018: கும்மிடிப்பூண்டி – சென்னை மூர்மார்க்கெட் இடையிலான மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
5. ரயில் எண் 42020: கும்மிடிப்பூண்டி – சென்னை மூர்மார்க்கெட் இடையிலான மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:
6. ரயில் எண் 42601: சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே வழக்கமாக காலை 9.40 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் 20 நிமிடம் தாமதமாக புறப்படும். அந்த ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
7. ரயில் எண் 42406: சூளூர்பேட்டை – சென்னை மூர்மார்க்கெட் இடையே காலை 10 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் 45 நிமிஷம் தாமதமாக புறப்பட்டு மீஞ்சூரில் 15 நிமிஷம் நிறுத்தப்படும்.

இதேபோல் அரக்கோணம் – திருத்தணி இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வியாழன், வெள்ளிக்கிழமை தவிர ஜூலை 11-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 43517: சென்னை மூர்மார்க்கெட் – திருத்தணி இடையே இரவு 8.15 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 43556: திருத்தணி – அரக்கோணம் இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

English Summary : Details of the change in rail service due to maintenance work.