ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. லீக் போட்டிகள் இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது அணிகளுக்கு கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் தோனி தலைமையிலான புனே அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இருந்தபோது கோப்பையை பெற்று தந்த தோனி, தற்போது புனே அணியை அரையிறுதிக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் புனே அணி ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி பெற்றதால் புனே அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
தோனியின் புனே அணி இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளை வென்றாலும் அதனால் 12 புள்ளிகளே எடுக்கமுடியும். இதனால் குறைந்தபட்சம் 14 புள்ளிகள் எடுக்கமுடியாமல் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறுகிற வாய்ப்பை இழந்துள்ளது. சிலசமயம் ஏழு வெற்றிகள் கூட பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கு உறுதியளிக்காது. உதாரணமாக, சென்றமுறை கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் 7 வெற்றிகள் பெற்றபோதும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாமல் போனது. இதன் அடிப்படையில் புனே அணி இந்தமுறை பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறாது என்றே கருதமுடியும்.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தோனி கேப்டனாக உள்ள ஓர் அணி, பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணி அனைத்து போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்தச் சாதனை வேறு எந்த அணிக்கும், வேறு எந்த கேப்டனுக்கும் கிடையாது. இந்நிலையில் தற்போது புனே கேப்டனாக உள்ள தோனி முதல்முறையாக இப்படிப்பட்ட ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளார்.
புள்ளிகள் பட்டியல்
ஐதராபாத் 14 புள்ளிகள்
குஜராத் 12 புள்ளிகள்
கொல்கத்தா 12 புள்ளிகள்
டெல்லி 10 புள்ளிகள்
மும்பை 8 புள்ளிகள்
பெங்களூர் 8 புள்ளிகள்
புனே 6 புள்ளிகள்
பஞ்சாப் 6 புள்ளிகள்
English Summary : Dhoni team not qualified for the first time in IPL history.