அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் சில நாட்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படம் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் ரீமேக் என்றும், அஜீத் இந்த படத்தில் டாக்சி டிரைவராக நடித்து வருவதாகவும் முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது படக்குழுவினர்களிடம் இருந்து வெளிவந்த புதிய தகவலின்படி இந்த படத்தில் டாக்சி டிரைவராக நடிப்பது அஜீத் இல்லை என்றும், ஸ்ருதிஹாசன் தான் டாக்சி டிரைவராக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வீரம் படத்திற்கு பின்னர் இயக்குனர் சிறுத்தை சிவா, மீண்டும் அஜீத்துடன் இந்த படத்தின் மூலம் இணைகின்றார். அதேபோல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஆரம்பம் மற்றும் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பின்னர் மீண்டும் அஜீத் படத்தை தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரும் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஏற்கனவே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Did Shruthihasan starring as Cab Driver in “Thala 56”?