கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்து இயக்குனர் கார்த்திக் நரேன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அந்த டிவீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
“நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது. மீடியாவிடம் இருந்து வந்த பல அழைப்புகள் வந்ததால் இந்த பதிலை டிவீட் செய்கிறேன்.
கார்த்திக்கிடம் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
நரகாசூரன் படத்தின் தயாரிப்பில் நான் எந்த விதத்திலும் தலையிடவில்லை. என்னுடைய குழுவினரிடமும், பணத்தை முதலீடு செய்தவரிகளிடமும் அவர் என்ன விரும்புகிறாரரோ அதைக் கொடுங்கள் என்று சொல்லியிருந்தேன்.
அவர் சுதந்திரமாக வேலை செய்யும் சூழல் உருவாக்கப்பட்டது. அவர் விருப்பப்படியே பெரி சம்பளத்துடன் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். சமீபத்தில் மாசிடோனியாவில் அவர் பின்னணி இசை அமைக்க விரும்பியதற்கும் நடத்தி வைக்கப்பட்டது.
இந்தப் படத்திற்காக நான் கொண்டு வந்த முதலீட்டார்கள் மூலம் மிகப் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டது. அதற்கு நான்தான் காரணம். மேலும் இந்தப் படத்தின் வியாபாரம் பெரிய அளவில் கிடையாது. அதனால், இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு முதலீடு செய்ய முடியாது.
மேலும் ‘துருவ நட்சத்திரம்’ படம் இந்தப் படத்தை விட ஏழு மடங்கு பெரியது. அது வேறு ஒருவரால் தயாரிக்கப்படுகிறது. நரகாசூரன் படத்தின் லாபத்திலிருந்து நான் 50 சதவீத பங்கைக் கேட்கவில்லை. அப்படத்தில் எனக்கு எந்த ஷேரும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
கார்த்திக் நான் இந்தப் படத்திலிருந்து விலக வேண்டும் என்று விரும்பினால் எனக்கு மகிழ்ச்சி. படத்தின் மீதான கடன் என்னுடையது கிடையாது.
கார்த்திக்கின் கோபம் எதனால் என்று எனக்கு புரிகிறது. அவரை முதலீடு செய்த யாரோ ஒருவர் தவறாக வழி நடத்துகிறார்கள். மார்க்கெட் எப்படியிருக்கிறது என்று புரியாமல் பேசுகிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டை யாராலும் தடுக்க முடியாது. படங்களைத் தயாரிப்பது அலமாரியில் அடுக்கி வைப்பதற்கல்ல.
‘துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களின் படப்பிடிப்புகள் நடிகர்கள் எப்போது தேதிகளைத் தருகிறார்களோ அப்போது நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் துருவ நட்சத்திரம் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பிபை 45 நாட்கள் முடித்துவிட்டோம். இரண்டு படங்களுமே பெரிய படங்கள், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள், இந்த வருடம் இரண்டுமே வெளியாகும்.
இரண்டு படங்களையும் தயாரிப்பாவர்கள் வேறு சிலர்தான். இரண்டு படங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மதன் என் பெயர் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இனி, அதுவும் இருக்காது. இந்தப் படமும் விரைவில் வெளியாகும்.
நரகாசூரன் விவகாரத்தில் சமீப காலத்தில் வேறு எந்தப் படமும் சந்திக்காத ஒன்று. அனைத்துத் தயாரிப்பாளர்களும் அதைக் கடந்துதான் வருவார்கள். ஒரு குழு சிறப்பாக வேலை செய்தால் அதை மற்றொரு குழு கீழிறக்க முயற்சி செய்யும். அதுதான் நடக்கிறது.
நாங்க படத்தை முடித்து வெளியிட முடிவு செய்துள்ளோம். இன்னும் சில நாட்களில் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவடையும். கார்த்திக்கின் அடுத்த படத்தின் ஆரம்ப வேலைகளில் எந்த விதத்திலும் தடையில்லை.
அவர் பிரச்சினையில்லாமல் பட வேலைகளை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு படமும் நல்ல வெளியீட்டிற்காகத்தான் உள்ளன. ஒரு வாரம் மட்டுமே ஓட வேண்டிய சூழலை நாங்கள் விரும்பவில்லை.
அரவிந்த்சாமி அவருடைய முழு சம்பளமும் கிடைக்கும் வரை டப்பிங் செய்ய மறுத்தார். அவர் டப்பிங் பேசி முடிக்க சீக்கிரமே வழி செய்வோம். அதன் பின் சரியான வெளியீட்டுத் தேதி கிடைத்தால் மற்ற பணிகளை முடித்துவிட்டு செய்வோம்.
கார்த்திக் நரேனிற்கும், எனக்கும் இடையிலான தவறான புரிதல் சரி செய்யப்பட்டுவிட்டது. விரைவில் இந்தப் படம் வெளிச்சத்தைப் பார்க்க வைக்கவும், அல்லது திரையரங்கின் இருட்டை பார்க்க வைக்கவும் வரும்,” என டிவீட் செய்திருக்கிறார் கௌதம் மேனன்.
English Summary:Director Karthik Narain – Gautham Menon’s end to the problem