பரோட்டா உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்
* மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா. மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
* இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாக சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையை கூட்டும்.
* அதுவும் குழந்தை பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இளவயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
* உடலுக்கு தேவையான நார்ச்சத்து இல்லாமல் இருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராக பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கிய பங்குஉண்டு.