புதுயுகம் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற “டாக்டர் ஆன் கால்” புது பொலிவுடன் பிரம்மாண்ட அரங்கில் புதிய வடிவில் திங்கள் முதல் சனி வரை காலை 10:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் தனித்தனி துறை சார்ந்த மருத்துவர்கள் நிகழ்ச்சியில் இடம் பெற்று நேயர்கள் கேட்கும் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் இருதய நோய், புற்றுநோய் , நரம்பியல், எலும்பு, மூட்டு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் தங்கள் கேள்விகளை தொலைபேசி வாயிலாக கேட்டு உடனடியாக அதற்கான விளக்கங்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வித்தியாசமான பல உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அதற்கு மருத்துவத்துறையில் தற்போது இருக்கும் அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றிய சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
ஆரோக்கியமாக நம்மை பராமரிப்பது மட்டுமின்றி நோய்கள் வராமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இந்நிகழ்ச்சியை கிருத்திகா மற்றும் திவ்யா தொகுத்து வழங்குகின்றனர்.