ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே 4ஜி சேவையை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கி வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனமும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது 4G நெட்வொர்க்கை பீட்டா டெஸ்ட் அடிப்படையில் சோதனை செய்து பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் ஒரு வினாடிக்கு 70 எம்.பி. வரை அதிகபட்சமாக டவுண்லோடு ஸ்பீடு பதிவாகியுள்ளதாகவும், பெரும்பாலான நேரங்களில் 15 முதல் 30 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் வேகம் இருந்ததாகவும் ட்ரையல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் வளத்தை மதிப்பிடும் கிரெடிட் சூயிஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வேகத்தில் இண்டர்நெட் தங்குதடையில்லாமல் இயங்கினால் ஒரு முழு திரைப்படத்தை 30 வினாடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நகர்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் 4G கவரேஜ் இருக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இம்மாத இறுதிக்குள் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய 4G சேவையை துவங்கும் என ரிலையன்ஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
English summary-Download a movie in just 30 seconds with Reliance 4G