சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ்.கே.ராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 69.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 35 ஆண்டுகள் பணியாற்றியவ டாக்டர் எஸ்.கே.ராஜன் மிகச் சிறந்த மருத்துவராகவும் மருத்துவ ஆசிரியராகவும் விளங்கியவர். டாக்டர் எஸ்.கே.ராஜனின் மறைவு, தமிழ் மருத்துவ உலகுக்கு பேரிழப்பாகும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
மரணமடைந்த டாக்டர் எஸ்.கே.ராஜனுக்கு மனைவி மற்றும் ஆர்.அஞ்சு மகாலட்சுமி, ஆர்.கற்பகம் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் பல் மருத்துவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : The Former dean of Stanley Medical College, Dr. S.K.Rajan passed away.