சென்னை-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து, ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர்-திருவாலங்காடு ரெயில் நிலையங்கள் இடையே 4-வது வழித்தடம் அமைப்பதற்காக என்ஜினீயரிங் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையட்டி நாளை (7-ந்தேதி) மற்றும் 8-ந்தேதி ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 7ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள்:
அரக்கோணத்தில் இருந்து 7-ந்தேதி புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் வரவேண்டிய பாசஞ்சர் ரெயில் 20 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து 7-ந்தேதி இரவு 10.10, 10.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு செல்லவேண்டிய மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து அன்றைய தினம் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருத்தணியில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் வரவேண்டிய மின்சார ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு அரக்கோணம் வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து 8-ந்தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய மின்சார ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஜூலை 8ஆம் தேதி மாற்றம் செய்யப்படும் மெயில்-எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விவரம் வருமாறு:-
* சென்னை சென்டிரலில் இருந்து நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் தான்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.13351) ஆவடியில் 120 நிமிடம் நிறுத்தப்பட்டு, பின்னர் புறப்படும்.
* ஈரோடு-சென்னை சென்டிரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (22650), கடம்பத்தூரில் 75 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்டிரலுக்கு 70 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
* பழனி-சென்னை சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22652), திருவாலங்காட்டில் 60 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்டிரலுக்கு 70 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
* பெங்களூர்-சென்னை சென்டிரல் மெயில் (12658), அரக்கோணத்தில் 60 நிமிடம் நிறுத்தப்பட்டு சென்டிரலுக்கு 50 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
* மேட்டுப்பாளையம்-சென்னை சென்டிரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (12672), அரக்கோணத்தில் 50 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்டிரலுக்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
* மும்பை சி.எஸ்.டி-சென்னை சென்டிரல் மெயில் (11027), அரக்கோணத்தில் 120 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்டிரலுக்கு 100 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
* மங்களூர்-சென்னை சென்டிரல் மெயில் (12602), அரக்கோணத்தில் 30 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்டிரலுக்கு 45 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
* ஆலப்புழா-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (22640), அரக்கோணத்தில் 30 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்டிரலுக்கு 45 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary :Due to maintenance work on July 7, 8 on the change in train services