கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானது. அதன் அடிப்படையில், வல்லுனர்கள் அளிக்கும் சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
சிக்கன நடவடிக்கையின் அடிப்படையில் ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறை சரியாக மூடப்படிருப்பது அவசியம். அதில் இடைவெளி இருந்தால் மின்சார பயன்பாடு அதிகமாகும். அடிக்கடி போடப்படும் சுவிட்சுகளை கூட மின் ஆற்றல் வீணாகும் வாய்ப்பு உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீடுகளில் மின்சார பயன்பாட்டில் 20 சதவிகித அளவை ஏ.சி எடுத்துக்கொள்ளும் நிலையில் அதனை கச்சிதமாக பயன்படுத்த வேண்டும். அறையில் வெப்ப நிலையை அதிகரிக்கும் சாதனங்களை ஏ.சி அறையில் அவசியமில்லாமல் வைப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். மேலும், ஏ.சி-யின் ‘அவுட்டோர் யூனிட்’ மரத்தடி போன்ற நிழலான இடங்களில் வைப்பதன் மூலம் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தை சேமிக்க இயலும்.
அறைகளில் உள்ள மின் விளக்குகள் கிட்டத்தட்ட 8 சதவிகித மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. சி.எப்.எல் விளக்குகள் எப்போதும் மின் சிக்கனத்துக்கு ஏற்றவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீடுகளின் மின்சார பயன்பாட்டில் சுமார் 12 சதவிகிதத்தை பிரிட்ஜ் எடுத்துக்கொள்கிறது. அதன் அடிப்படையில் அதிகப்படியான குளிர்ச்சி கொண்ட நிலையில் பிரீசர்களை வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல. மேலும், அடிக்கடி பிரிட்ஜை திறப்பதையும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, பிரிட்ஜ் மற்றும் சுவருக்கு இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். அதனால் பிரிட்ஜ் உபயோகத்துக்கான மின்சார தேவை குறைய வாய்ப்புள்ளது.