job offer

சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் 6 அலுவலக உதவியாளர் மற்றும் 2 காவலர் பணியிடங்கள் என மொத்தமாக 8 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி எனவும் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 வயது நிரம்பியவர்களில் இருந்து 32 வயது வரையிலான பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 வயது வரையிலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கும் 37 வயது வரையிலும் வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

விண்ணப்பதாரர் உரிய உடற்தகுதி சான்று அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை மருத்துவரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தோடு சேர்த்து மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை 29.08.2023ம் தேதி வரை அரசு பணி நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியிலிருந்து பெற்று அதனை முறையாக நிரப்பி, பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

முகவரி:

துணை இயக்குநர் (நிர்வாகம்),
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு),
எண்,42, ஆலந்தூர் ரோடு,
திரு.வி.க தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை600 032.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *