ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பலவிதமான சமையல் நிகழ்ச்சியில் ஒன்றான ’என்ன சமையலோ’ சமையல் நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. இதில் இளம் சமையல் கலை வல்லுநர் யஷ்வந்த்குமார் பல ஊர்களில் புகழ்பெற்ற சைவ, அசைவ உணவு வகைகளையும், பிரபலமான உணவகங்களில் உள்ள உணவு வகைகளையும் சமைப்பது எப்படி மற்றும் அதற்கான தேவையான பொருட்கள் என்ன என்பதையும் சொல்லி, சமைத்துக் காட்டும் நிகழ்ச்சி தான் ’என்ன சமையலோ’.
மேலும் இதில் காய்கறிகளை எப்படி நறுக்குவது மற்றும் சமையல் நுட்பங்களையும் நேர்த்தியாக விளக்குகிறார். இது ஜெயா தொலைக்காட்சியில் புதன் கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கும், மறு ஒளிபரப்பு மறுநாள் வியாழக்கிழமை பகல் 1:00 மணிக்கும் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை இயக்குபவர் பெண் இயக்குநர் அனுஷா.