எம்.பார்ம்., மற்றும் முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பார்ம்., முதுநிலை இயன்முறை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.பார்ம். படிப்புக்கு நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே மாதத்துக்குள் வெளியிடப்பட்டு அதன்பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகள் அரசு கல்லூரிகளில் இல்லை என்பதால் இந்த படிப்பை படிக்க மாணவர்கள் சுயநிதி கல்லூரிகளில் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் மே மாதம் நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary: Entrance Exam Date announced for M.Form degree.