பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் கடலுாரில் மண்டல அலுவலகங்களும் உள்ளது
மாணவர்கள் தேர்வு தொடர்பாகவும், சான்றிதழ் தொடர்பாகவும் இதுவரை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர இருந்த நிலையை மாற்றும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகம் அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது
இதன் அடிப்படையில் 32 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், தேர்வு மற்றும் சான்றிதழ் தொடர்பாக சென்னைக்கு வரத்தேவையில்லை.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலேயே அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், பெயர் மாற்றம், தேர்வு விவகாரங்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். விரைவில் 32 மாவட்டத்திற்கும் தேர்வுத்துறை உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவர்.