தொழிலாளர் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல வேண்டுகோள்கள் வந்ததை அடுத்து தற்போது ஜூன் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர் நிர்வாகத்தில் ஓராண்டு பகுதி நேர முதுகலைப் பட்டயப் படிப்பு, தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டம் குறித்த ஓராண்டு வார இறுதி பட்டயப் படிப்பு ஆகியன தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததால், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. (தபாலில் பெற ரூ.250) தாழ்த்தப்பட்ட-பழங்குடியினருக்கு ரூ.100 (தபாலில் பெற ரூ.150). தபாலில் பெற வங்கி வரைவோலையை The Director, Tamilnadu Institute Of Labour Studies, Chennai-5 என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, இணைப் பேராசியர்கள் வி.ஜி.தியாகராஜன் (9841192332), ஆர்.ரமேஷ்குமார் (9884159410) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்.5, காமராஜர் சாலை, சென்னை-600 005. தொலைபேசி எண்கள்: 044-28440102, 28445778.
இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Extension of deadline to apply a Labour Study.