தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வரும் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களிலும் கூடுதலாக ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியை நிரந்தரமாக இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நேற்று தென்னக ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ‘ரயில் எண் 12661-12662 சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மார்ச் 13ஆம் தேதியில் இருந்தும், ரயில் எண் 12631-12632 சென்னை திருநெல்வேளி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று முதலும் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதுவரை ஐந்து ஏசி பெட்டிகளுடன் மட்டுமே பயணம் செய்தது. தற்போது கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தென்மாவட்ட பயணிகள் கூடுதல் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
English Summary : Southern Railway has decided to permanently link 3rd class AC boxes for Nellai and Podhigai Express trains.