panchu aurnachalamபிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார்.

சினிமா ஸ்டுடியோவில் ‘செட்’ உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் ‘இளையதலைமுறை’, ‘மணமகளே வா’, ‘புதுப்பாட்டு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கிய திரைப்படங்கள்
——————————————

இளைய தலைமுறை (1977)
என்ன தவம் செய்தேன் (1977)
சொன்னதை செய்வேன் (1977)
நாடகமே உலகம் (1979)
மணமகளே வா (1988)
புதுப்பாட்டு (1990)
கலிகாலம் (1992)
தம்பி பொண்டாட்டி (1992)

தயாரித்த திரைப்படங்கள்
————————————————

ஆறிலிருந்து அறுபதுவரை (1979)
கல்யாண ராமன் (1979)
எங்கேயோ கேட்ட குரல் (1982)
ஆனந்த ராகம் (1982)
ஜப்பானில் கல்யாணராமன் (1985)
குரு சிஷ்யன் (1988)
மைக்கேல் மதன காம ராஜன் (1991)
ராசுக்குட்டி (1992)
தம்பி பொண்டாட்டி (1992)
வீரா (1994)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
ரிஷி (2001)
சொல்ல மறந்த கதை (2002)
மாயக் கண்ணாடி (2007)
காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)

இவர் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர். நடிகர் சுப்பு பஞ்சு இவரது மகன்.

English Summary: Famous writer, producer,Panchu Arunachalam passed away!