புதுடில்லி: குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 11 சதவீதம் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழில்துறை வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டில் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித் துள்ளது. 2017-18 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை யிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 25.35 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், 2018-19 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இது 22.66 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 11 சதவீத சரிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சேவைத்துறையில் 4.91 பில்லியன் டாலரும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் 2.54 பில்லியன் டாலரும், தொலைதொடர்பு துறையில் 2.17 பில்லியன் டாலரும், வர்த்தகத்தில் 2.14 பில்லியன் டாலரும், ரசாயனங்கள் துறையில் 1.6 பில்லியன் டாலரும் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் 1.59 பில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டில் அதிகமாக பங்கு வகிக்கும் நாடு சிங்கப்பூர்.