வருகிற தீபாவளி பண்டிகைக்காக 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல எதுவாக நாளை நவம்பர் 3 மற்றும் நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட நெரிசலை தடுக்க சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 4 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாநகருக்குப் பதிலாக, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், சைதாப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு பதில் கே.கே.நகரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை செல்பவர்கள் கோயம்பேடு மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் ஏறிக்கொள்ளலாம்.
சிறப்பு பேருந்துக்குள் எங்கிருந்து இயக்கப்படுகிறது.!
*மாதவரம் பேருந்து நிலையம் : ஆந்திரா மார்க்கமான செல்லும் அனைத்து பேருந்துகளும்.
*கே.கே நகர் பேருந்து நிலையம் : ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
*தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் : விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
*பூந்தமல்லி பேருந்து நிலையம் : காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் .
*கோயம்பேடு பேருந்து நிலையம் : மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும்.