இந்திய உணவுக் கழகத்தில், பல்வேறு பதவிகளில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
ஜூனியர் இன்ஜினியர் (JE) (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்)
அசிஸ்டெண்ட் கிரேடு – II (இந்தி)
ஸ்டெனோ கிரேடு – II
டைபிஸ்ட் (இந்தி)
அசிஸ்டெண்ட் கிரேடு – III (ஜெனரல் / அக்கவுண்ட்ஸ் / டெக்னிக்கல் / டிபோட்)
மண்டல வாரியாக காலிப்பணியிடங்கள்:
வடக்கு மண்டலம் (North Zone): 1,999
தெற்கு மண்டலம் (South Zone): 540
கிழக்கு மண்டலம் (East Zone): 538
மேற்கு மண்டலம் (West Zone): 735
வடகிழக்கு மண்டலம் (North East Zone): 291
மொத்தம் = 4,103 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 28.02.2019, காலை 10.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2019, இரவு 12.00 மணி
ஏப்ரல் / மே – 2019 க்குள் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயது வரம்பு: (01.01.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக, 25 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருத்தல் அவசியம்.
ஊதியம்:
1. ஜூனியர் இன்ஜினியர் (JE) (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ. 11,100 முதல் அதிகபட்சமாக ரூ.29,950 வரை.
2. அசிஸ்டெண்ட் கிரேடு – II என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.9,900 முதல் அதிகபட்சமாக ரூ.25,530 வரை.
3. ஸ்டெனோ கிரேடு – II (இந்தி) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.9,900 முதல் அதிகபட்சமாக ரூ.25,530 வரை.
4. டைபிஸ்ட் (இந்தி) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ.22,940 வரை.
5. அசிஸ்டெண்ட் கிரேடு – III (ஜெனரல் / அக்கவுண்ட்ஸ் / டெக்னிக்கல் / டிபோட்) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ.22,940 வரை.
தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர்: ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்/ PwBD / முன்னாள் ராணுவத்தினர் / பெண்கள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
ஆன்லைனில் கிரெடிட், டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், IMPS , கேஷ் கார்ட்ஸ், மொபைல் வால்லட்ஸ் / UPI போன்ற ஏதேனும் ஒரு முறைகளில் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
கல்வித்தகுதி:
1. ஜூனியர் இன்ஜினியர் (JE) (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) என்ற பணிக்கு, பி.இ (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) இளங்கலை பொறியியல் பட்டயப்படிப்பை பயின்றோ அல்லது டிப்ளமோ இன் இன்ஜினியரிங் என்ற படிப்பை பயின்று அத்துடன் அத்துறை சார்ந்த 1 – வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. அசிஸ்டெண்ட் கிரேடு – II (இந்தி) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி, அதுமட்டுமல்லாமல் இந்தியை முதன்மை பாடமாக பயின்றும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனும், ஆங்கிலம் – இந்தி மொழிபெயர்ப்பில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
3. ஸ்டெனோ கிரேடு – II என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கம்யூட்டர் சயின்ஸ் / கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்ற பட்டப்படிப்பில் தேர்ச்சி, தட்டச்சில் 80 W.P.M வேகம் செய்யும் திறன் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
4. டைபிஸ்ட் (இந்தி) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி, இந்தி தட்டச்சில் 30 W.P.M வேகம் செய்யும் திறன் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
5. அசிஸ்டெண்ட் கிரேடு – III (ஜெனரல் / அக்கவுண்ட்ஸ் / டெக்னிக்கல் / டிபோட்) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டயப்படிப்பிலோ அல்லது பிஎஸ்.சி / பி.காம் என்ற பட்டப்படிப்பிலோ தேர்ச்சியுடன் கூடிய கம்யூட்டர் உபயோகிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய உணவுக் கழகத்தின், www.fci.gov.in– என்ற இணையத்தில் சென்று, மண்டலத்தை தேர்வு செய்து, பின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, http://recruitmentfci.in/assets/FINAL%20ADVERISEMENT%20WITH%20REVISED%20SCHEDULE.pdf – என்ற இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.