சென்னை: இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக, நாகை மாவட்டம் அணைக்காரன்சத்திரத்தில் 4 செ.மீ, கடலூர் மாவட்டம் சிதம்பரம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.