சென்னையில் இன்று காலை முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகளான ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை முன்னிட்டு ஏரியில் இருந்து அதிகளவு நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சற்று முன்னர் சென்னை கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அவசர செய்தியில், “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் தற்போது வினாடிக்கு 5000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் உபரி நீர் திறந்துவிடும் அளவு 7500 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு சென்னை கலெக்டரின் அவசர செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary-Four lakes near Chengalpet breaches