கமல்ஹாசனின் அடுத்த படமான ‘தூங்காவனம்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கில்ஸ் கோன்செயில், சில்வெயின் கேபெட், மற்றும் விர்ஜினி அர்னாட் (Gilles Conseil, Sylvain Gabet and Virgine Arnaud) ஆகிய மூன்று சண்டைப்பயிற்சியாளர்கள் தூங்காவனம் படத்தில் பணிபுரியவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் பல அதிரடி சண்டைக்காட்சிகள் இடம்பெறவுள்ளதாகவும், சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாகவும், அதிரும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரான்ஸ் நாட்டு சண்டைப்பயிற்சியாளர்களை பயன்படுத்த இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, கிஷோர் ,சம்பத்குமார், யூகிசேது உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகின்றது. கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார்.
English Summary: France Stunt Masters are going to work in Kamal’s Next Film Thoongavanam.